EPFO : ஏடிஎம் மூலம் PF பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் வரப்போகிறது.. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்!

Mansukh Mandaviya about EPFO 3.o | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் 3.o சேவைகள் விரைவில் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : ஏடிஎம் மூலம் PF பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் வரப்போகிறது.. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

21 Apr 2025 22:41 PM

இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சக (EPFO – Employee Provident Fund Organization) பயனர்கள் உள்ளனர். இவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் சில நல்ல செய்திகள் வெளியாகி உள்ளன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை (Department of Labour and Employment) அமைச்சர் மன்சுக் மாண்டவியா EPFO குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் பயனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் நடைமுறை உள்ளிட்ட சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் புதிய அம்சங்கள் குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறிய தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள EPFO 3.o

தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மூலம் பணம் எடுப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் நிலையில், அதனை குறைக்க  EPFO 3.0 திட்டம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதாவது EPFO 3.0 திட்டம் 2025, மே அல்லது ஜூன் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் கூறிய சில முக்கிய தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் க்ளெய்ம் இனி நீண்ட நாட்கள் எடுக்காது

தற்போதுள்ள பிஎஃப் க்ளெய்ம் நடவடிக்கைகளின் படி, ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இணையதளம் அல்லது செயலி மூலம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அதற்கு நிறுவனத்தின் அனுமதி பெற காத்திருந்து, வங்கி கணக்கில் பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இந்த செயல்முறைக்கு குறைந்தது 15 நாட்கள் வரை ஆகும் நிலையில், அதனை இந்த EPFO 3.0 திட்டம் குறைக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

பிஎஃப் பணத்தை ஏடிஎம்-ல் எடுக்கலாம்

பிஎஃப் பணத்திற்காக விண்ணப்பித்து அது வங்கி கணக்கிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், அதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால் பயனர்கள் தங்களது பிஎஃப் பணத்தை நேரடியாக ஏடிஎம் மையங்கள் மூலமே எடுத்துக்கொள்ளும் சிறப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டம் 2025 மே அல்லது ஜூன் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

ஓய்வூதிய முறையில் வரப்போகும் மாற்றம்

EPFO-ன் ஓய்வூதிய திட்டத்தை நெறிப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். குறிப்பாக அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Scheme), பிரதம மந்திரி ஜீவன் பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Bima Yojana) மற்றும் ஷ்ராமிக் ஜன் தன் யோஜனா (Shramik Jan Dhan Yojana) உள்ளிட்ட திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.