Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?

New Car Loan Rates: 2025 ஆம் ஆண்டு கார் லோன் வாங்க நினைப்பவர்களுக்காக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய முன்னணி வங்கிகளின் புதிய வட்டி விகிதங்களை ஒப்பிட்டு விரிவான கட்டுரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறைந்த வட்டி, சிறந்த கடன் வசதிகள் குறித்து தெரிந்து கொண்டு, உங்களுக்கேற்ற சிறந்த வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.

கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 26 Apr 2025 15:05 PM

இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அவசிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. குடும்பத்துடன் பயணிக்க கார் மிகவும் அவசியம். பலருக்கும் தங்கள் மாத வருமானத்தில் கார் வாங்குவது என்பது சவாலானாதாகவே இருக்கும். நிறைய வங்கிகள் கார் லோன் (Car Loan) வழங்குகின்றன. அவற்றில் குறைந்த வட்டி விகிதங்கள் (Interest Rate), கட்டணம் போன்றவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India), எச்டிஎஃப்சி, பிஎன்பி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை சிறந்த கார் லோனை வழங்குகின்றன. அவற்றில் வட்டி விகிதம் சிறந்த கடன் வசதி, செயல் கட்டணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற வங்கியை தேர்ந்தெடுக்க இங்கே விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India)

இந்த வங்கி புதிய கார்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி விகிதம் 8.65 சதவிகிதம் முதல் 9.45 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல எலக்ட்டிர்க கார்களுக்கு வட்டி விகிதமாக 8.60 சதவிகிதம் முலம் 9.30 சதவிகிதம் வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய கார்களுக்கு வட்டி விகிதம் 11.25 சதவிகிதம் முதல் 14.75 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் தொகை புதிய கார்களுக்கு ஆன் ரோடு விலையில் 90 சதவிகிதம் வரை வழங்கப்படும். கடன் காலம் 7 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிராசசிங் கட்டணமாக புதிய கார்களுக்கான கடன் தொகையில் 0.25 சதவிகிதம் மற்றும் ஜிஎஸ்டி பெறப்படுகிறது.

எச்டிஎஃப்சி (HDFC Bank)

எச்டிஎஃப்சி வங்கி புதிய கார்களுக்கு 7.95 சதவிகிதம் முதல் 8.30 சதவிகிதம் வரையும், எலக்ட்ரிக் கார்களுக்கு 8.75 முதல் மற்றும் பழைய கார்களுக்கு 13.75 சதவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தொகை காரின் ஆன் ரோடு விலையில் 100 சதவிகிதம் வழங்கும். மேலும் கடன் காலம் 1 முதல் 7 ஆண்டுகள் வரை மற்றும் கடன் தொகையின் 0.5 சதவிகிதம் பிராசசிங் கட்டணமாக நிர்ணியக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)

புதிய கார் கடன் வட்டி விகிதம் 8.9 சதவிகிதம் முதல் 9.75 சதவிகிதம் வரையும், எலக்ட்ரிக் கார்களுக்கு 8.90 சதவிகிதம் முதல் 9.79 சதவிகிதம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் தொகை ரூ. 1 கோடி வரை வழங்குகிறது. இந்த வங்கியில் லோனுக்கு பிராசசிங் கட்டணம் இல்லை.

ஆக்சிஸ் வங்கி (Axis Bank)

புதிய காருக்கு 8.55 சதவிகிதம் முதல் 13.05 சதவிகிதம் வரையும், பழைய காருக்கு 13.45 சதவிகிதம் முதல் 17.00 சதவிகிதம் வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கார்களுக்கு ஆன் ரோடு விலையில் 100 சதவிகிதம் வரையும் பழைய கார்களுக்கு கார் மதிப்பில் 85 சதவிகிதம் வரையும் வழங்குகிறது. அதே போல புதிய கார்களுக்கு பிராசசிங் கட்டணமாக ரூ.3500 முதல் ரூ. 5500 வரையும் பழைய கார்களுக்கு கடன் தொகையில் 1 சதவிகிதமும் நிர்ணயிக்கப்படும்.

மேலே கொடுக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கின்றன. எச்டிஎப்சி வங்கி குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி பிரசாசிங் கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால் உங்கள் காருக்கான செலவுகள் குறையும். எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் ஆன்ரோடு விலையின் 100% வரை கடன் வழங்குகின்றன. இதனால் நீங்கள் தனியாக செலவிட தேவையில்லை. 

 

166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!
166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!...
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?
பிஎஃப் பணத்தை எத்தனை முறை எடுக்கலாம் - விதிகள் கூறுவது என்ன?...
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!...
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!
வயதான தலைவர்களால் இளைஞர் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா!...
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள்!...
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்!...
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!...
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!
அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!...
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!
பிருத்விராஜின் இந்த மலையாள க்ரைம் திரில்லர் படத்தை பாருங்கள்!...
இனி அதெல்லாம் நடக்காது - கோவை கருத்தரங்கில் விஜய் அதிரடி!
இனி அதெல்லாம் நடக்காது - கோவை கருத்தரங்கில் விஜய் அதிரடி!...
விமானத்தில் ரசிகர்களுடன் எளிமையாகப் பயணித்த ரஜினிகாந்த்!
விமானத்தில் ரசிகர்களுடன் எளிமையாகப் பயணித்த ரஜினிகாந்த்!...