கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா.. ஆர்பிஐ கூறுவது என்ன?

Can people buy gold using credit card | தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை பயன்படுத்தி தங்கம் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா என்பது குறித்து பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா.. ஆர்பிஐ கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

27 Apr 2025 19:08 PM

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. பெண்கள் தங்க நகைகளை அணிவது முதல் சுப காரியங்களுக்காக தங்கம் வைக்கப்படுவது என பல இடங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிகம் தங்கம் நுகரும் நாடாக இந்தியா உள்ளது. ஆனால், சமீப காலமாக உலக அளவில் தங்கம் அதிகம் நுகரப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களால் தங்கம் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

தங்கம் விலை இவ்வாறு தொடர் உயர்வை சந்தித்து வந்தால் விரைவில் அது ரூ.1,00,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக தங்களிடம் இருக்கும் பணத்தில் பொதுமக்கள் தங்கத்தை வாங்கி சேமித்து வருகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா, அது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா – ஆர்பிஐ கூறுவது என்ன?

கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கு 2013 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கப்படும் தங்க நகை பண பரிவர்த்தனைகளை மாத தவணையாக (EMI – Every Month Install) மாற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமன்றி, வங்கி கிளைகளில் தங்க நாணயங்களை வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கும் தடை விதித்தது. இருப்பினும் சில வங்கிகள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தங்கம் வாங்க அனுமதி வழங்கி வந்தன.

ஆனால், அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வெளியிட்ட கட்டுப்படுகளின் அடிப்படையில், தற்போது எந்த வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கு அனுமதி வழங்குவதில்லை. கிரெடிட் கார்டு மூலம் தங்கம் வாங்குவதற்கு சில நிறுவனங்கள் கட்டணம் விதிக்கும். அதன்படி, நீங்கள் 1000 ரூபாய்க்கு தங்கம் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். எவ்வாறாயினும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின் காரணமாக கிரெடி கார்டுகளை பயன்படுத்தி தங்கம் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.