வரி சலுகையுடன் கூடிய சிறப்பு சேமிப்பு திட்டங்கள்.. முதலீடு செய்ய பெஸ்ட் ஆப்ஷன்!
Tax Saving Investment Schemes | பொதுமக்கள் நிலையான பொருளாதாரம் பெற வேண்டும் என்பதற்காக பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில்ம் வரி சலுகையுடன் கூடிய திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொருளாதாரம் (Economy) மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொருளாதாரம் இல்லை என்றால் அத்தியாவசிய தேவைகளை (Fundamental Needs) கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதனால்தான், அனைவரும் பாதுகாப்பான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் (Economist) ஆலோசனை வழங்குகின்றனர்.
சிறப்பு அம்சங்களுடன் கூடிய சேமிப்பு திட்டங்கள்
இதன் காரணமாக, ஏராளமான மக்கள் பாதுகாப்பான பொருளாதாரத்தை கட்டமைக்கும் வகையில் சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்கால தேவைகளுக்கான சேமிக்க விரும்பும் பொதுமக்கள் எத்தகைய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என தெரியாமல் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில், வரி சலுகை (Tax Benefits) வழங்க கூடியா பாதுகாப்பான சில சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரி சலுகையுடன் கூடிய பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள்
வரி சலுகையுடன் பாதுகாப்பான மூன்று சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (Public Provident Fund) நீண்ட கால முதலீட்டிற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்துக்கும் அதன் முதிர்வு தொகைக்கும் வருமான வரி இல்லை. இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும் நிலையில், அதற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Saving Certificate) நிலையான வருமானத்தை பெற ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்கு வரி சலுகையும் (Tax Benefit) வழங்கப்படுகிறது. அதாவது, ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு இந்த திட்டத்தில் வரி விலக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம் என்ற நிலையில், இந்த திட்டத்திற்கு 7.70 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமாக கருதப்படுகிறது. பெண் குழந்தைகளின் குழந்தை பருவம் முதல் பருவம் அடையும் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.250 முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டதிற்கு 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.