பெண்களுக்கான 5 சிறந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் !
உங்கள் ஓய்வூதியத்திற்காக சேமிக்க விரும்பினாலும், உங்கள் குழந்தையின் கல்விக்காக சேமிக்க விரும்பினாலும், அல்லது எதிர்காலத்தில் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினாலும் தபால் நிலையத் திட்டங்கல் நல்ல தேர்வு. இவை அதிக வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன.

பொருளாதார ரீதியாக முழுமையாக யாரையும் சார்ந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்பும் பெண்களுக்கு தபால் நிலைய (Post Office) முதலீட்டு திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது. மற்றவைகளைக் காட்டிலும் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக தபால் நிலைய திட்டங்கள் கருதப்படுகிறது. மேலும் உங்கள் ஓய்வூதியத்திற்காக (Pension Scheme) சேமிக்க விரும்பினாலும், உங்கள் குழந்தையின் கல்விக்காக சேமிக்க விரும்பினாலும், அல்லது எதிர்காலத்தில் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினாலும் தபால் நிலையத் திட்டங்கல் நல்ல தேர்வு. இவை அதிக வட்டி (Tax)விகிதங்கள், வரிச் சலுகைகள் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. நல்ல வருமானத்தை வழங்கும் பெண்களுக்கான சிறந்த தபால் நிலையத் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.
1. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme)
வழக்கமான வருமானத்தை விரும்பும் பெண்களுக்கு, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு அருமையான தேர்வாகும். POMIS என்பது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நம்பகமான முதலீட்டுத் திட்டமாகும். தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் இது, 7.4% வட்டி விகிதத்துடன் கூடிய சேமிப்பு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் தபால் அலுவலகத்தில் மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கைத் துவங்கும்போது, நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையை முதல் 5 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பிந்தைய தேதியிட்ட காசோலைகள் அல்லது மின்னணு கிளியரன்ஸ் சேவையைப் பயன்படுத்தி உங்கள் சேமிப்புக் கணக்கு மூலம் மாதாந்திர வட்டியை எடுத்துக்கொள்ளலாம்.
2. தபால் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டம் (Post Office Senior Citizens Savings Scheme )
நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம் மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுகிறது. பிற்காலத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய விரும்பும் வயதான பெண்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அரசின் அங்கீகாரம் பெற்ற சேமிப்புத் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டமானது காலாண்டு வட்டி விகிதத்தை 8.2% வழங்குகிறது. இந்தத் திட்டம் 5 ஆண்டு முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதனை கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
3. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (National Savings Certificate)
நிலையான வருமானத்துடன் நீண்ட கால முதலீட்டை விரும்பும் பெண்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் இணையலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை. இந்தத் திட்டம் 5 வருட முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, பெண்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கை பெறலாம். தங்கள் குழந்தைகளின் கல்வி அல்லது ஓய்வூதியம் போன்ற நீண்ட கால இலக்குகளைத் திட்டமிடும் பெண்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது.
4. சுகன்யா சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Account)
நீங்கள் உங்கள் மகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பும் ஒரு தாய் அல்லது தந்தையாக இருந்தால், சுகன்யா சம்ரிதி முதலீடு செய்ய சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டம் ஆண்டுக்கு 8.2% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்தலாம். மேலும் உங்கள் மகளுக்கு 21 வயது அடையும் வரை கணக்கைப் பராமரிக்கலாம். இது பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளுடன் வருகிறது, இது ஒரு மகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு நல்ல நீண்ட கால முதலீடாக அமைகிறது.
5. கிஷான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra)
குறிப்பிட்ட காலத்தில் தங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பும் பெண்களுக்கு, கிசான் விகாஸ் பத்ரா ஒரு சிறந்த தேர்வாகும். ஜனவரி 1, 2024 முதல், வட்டி விகிதங்கள் அடிப்படையில் ஆண்டுதோறும் 7.5% கூட்டுத்தொகையுடன், முதலீடு செய்யப்பட்ட தொகை 115 மாதங்களில் (9 ஆண்டுகள், 7 மாதங்கள்) இரட்டிப்பாகிறது. ரூ. 1000 செலுத்தி இந்தத் தொட்டத்தில் இணைந்துகொள்ளலாம். மேலும் இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு இல்லை. இது உங்கள் முதலீட்டை சுமார் 9.5 ஆண்டுகளில் அல்லது தோராயமாக 115 மாதங்களில் இரட்டிப்பாக்குகிறது.