30 வயதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? ரூ.1 கோடி பெறுவது எப்படி?
Smart Investing at 30: ஒருவர் 30 வயதில் முதலீடு செய்யத் துவங்குவது தாமதமல்ல. அதற்கு சரியான திட்டமிடல் மற்றும் பொறுமை அவசியம். மாதம் ரூ.10, 000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் குடும்ப சுமைகள் அனைத்தையும் இறக்கி வைத்து செட்டில் ஆவதற்கே குறைந்தது 30 வயதாகி விடுகிறது. அதற்கு பிறகு தான் சேமிப்பு (Savings) மற்றும் முதலீடு (Investment) என எதிர்காலம் குறித்து திட்டமிட முடியும். ஆனால் அந்த வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் நம்மால் நினைத்த தொகையை எதிர்காலத்தில் பெற முடியுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். ஒருவர் முப்பது வயதில் முதலீடு செய்யத் துவங்கினாலும் அவரால் ரூ.1 கோடிக்கும் மேல் லாபம் பெற முடியும். ஆனால் அதற்கு சரியான திட்டமிடலும் பொறுமையும் அவசியம். நம்மில் பலர் நிதி சுதந்திரம் வேண்டும், எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் அதை அடைய, நம் வாழ்க்கையின் சரியான கட்டத்தில் முதலீடு செய்வது மிக அவசியம். ஒருவர் தாமதமாக முதலீடு செய்யத் துவங்கினாலும் எதிர்காலத்தில் ரூ.1 கோடி பெறுவது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எப்படி சாத்தியம்?
ஒருவர் மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் 21 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக முதலீடு செய்ய வேண்டும். அவர்களுக்கு வருடம் 12 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். இதனையடுத்து 21 ஆண்டுகள் முடிவில் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக லாபம் பெறலாம். 30 வயதில் முதலீடு செய்யத் துவங்குவதை அவ்வளவு பெரிய தாமதமாக கருத முடியாது. ஒருவர் மாதம் ரூ.10000 முதலீடு செய்தாலே 21 வருடங்களில் இலக்கை அடைய முடியும். எனவே தாமதிக்காமல் உடனே துவங்குவது நல்லது.
சிறந்த முதலீட்டு வாய்ப்பை அளிக்கும் திட்டங்கள்
சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan ), ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Fund), பப்பளிக் புரொவிடென்ட் ஃபண்ட் (Public Provident Fund) நேஷனல் பென்சன் ஸ்கீம் (National Pension Scheme) ஆகியவற்றில் ஏதேனும் திட்டங்களில் வட்டி விகிதங்களை சரிபார்த்து முதலீடு செய்யலாம்.
முதலில் முதலீட்டுக்கான வயதை அடிப்படையாக வைத்து சரியாக திட்டமிட வேண்டும். ஒருவர் தனது 30வது வயதில் முதலீடு செய்யத் துவங்கினார் என்றால் அது சரியான வயதாகவே பார்க்கப்படுகிறது. வயது அதிகரிக்க, அதிகரிக்க நாம் மாதம் செலுத்த வேண்டிய தொகையும் அதிகரிக்கும். உதாரணமாக ஒருவர் தாமதமாக 35 வயதில் முதலீடு செய்யத் துவங்கினால் அவர் ரூ.1 கோடி என்ற இலக்கை அடைய, மாதம் ரூ.18,000 வரை முதலீடு செய்ய வேண்டி வரும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் துவங்குவது அவசியம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)