ரெப்போ வட்டி விகித குறைப்பு எதிரொலி.. வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை குறைக்க வங்கிகள் நடவடிக்கை!
Banks Reduced Interest Rates for Loans | இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 13, 2025 அன்று ரெப்பொ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் குறைத்து அறிவித்தது. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகித குறைப்பால் சில வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதங்களை குறைத்து அறிவித்துள்ளன.

மாதிரி புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்து அறிவித்துள்ள நிலையில், வீட்டுக்கடன் (Home Loan), வாகனக்கடன் (Vehicle Loan) வட்டி விகிதங்களை குறைப்பதற்கான நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. வங்கிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக வீடு மற்றும் வாகன கடன் வாங்க உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகள் நடவடிக்கை எடுப்பது ஏன், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலம் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்த ரிசர்வ் வங்கி
இந்தியாவின் நிதி சார்ந்த விவகாரங்களை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வது, ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி கடந்த பலமுறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 11, 2025 அன்று மீண்டு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து ஆர்பிஐ அறிவித்தது.
முன்னதாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைத்தது. ஆர்பிஐ 25 புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்த நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 11, 2025 அன்று மீண்டும் 25 புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்தது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக மாறியது. ரெப்போ வட்டி விகிதம் குறைவதால் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில வங்கிகள் தங்களின் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.
வட்டி விகிதங்களை குறைத்த வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், சில வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி ரெப்போ உடன் இணைந்த கடனுக்கான வட்டி விகிதத்தை 9.05 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 11, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சால் நேஷனல் வங்கி ரெப்போ உடன் இணைந்த கடனுக்கான வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த மாற்றம் ஏப்ரல் 10, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் தனது ரெப்போ உடன் இணைந்த கடனுக்கான வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்தில் இருந்த8.85 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த மாற்றம் ஏப்ரல் 09, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்துள்ள நிலையில், மேலும் சில வங்கிகள் தங்களின் வட்டி விகிதங்களை குறைக்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.