Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி – யாருக்கு லாபம் ?

RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால் அது கடன் பெற்றவர்களுக்கான சுமையை குறைக்க உதவும் என கூறப்படுகிறது. மேலும் புதிதாக கடன் பெற விரும்புபவர்களும் சரியான வங்கிகளைத் தேர்ந்தெடுத்து பயனடையலாம். ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? அதனால் யாருக்கு லாபம்? என்பவை குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி – யாருக்கு லாபம் ?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 11 Apr 2025 15:27 PM

இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது, குழந்தைகளின் படிப்பு போன்ற முக்கிய தேவைகளுக்கு வங்கிக் கடனை நம்பியே இருக்கின்றனர். இருப்பினும் பெரும்பாலானோரின் மாத வருமானத்தில் இஎம்ஐ (EMI) எனப்படும் மாதத் தவணை செலுத்துவது பெரும் சுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகித்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 6.25 இல் இருந்து   6 ஆக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகள் தங்களது ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன. இதனால் கடன் பெற்றவர்கள் இனி வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாத தவணை குறைவாகும் வாய்ப்பு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த விகிதம் குறைவதால், மக்கள் வங்கிகள் கடன்களை குறைந்த வட்டியில் பெற முடியும், இது வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றின் மாத தவணை சுமையயை குறைக்கும். இதனால், நடுத்தர வர்க்க மக்களின் மாதாந்திர செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும்.

ரெப்போ வட்டி விகிதம் குறைவதால் யாருக்கு லாபம்?​

மேலும், வட்டி விகிதம் குறைவதால்,  இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை வேறு வழிகளில் செலவழிப்பார்கள் என்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் வங்கிகள் கடன்களுக்கான வட்டியைக் குறைக்க தாமதப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.  மேலும் சில வங்கிகள் தங்கள் விதிகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த வட்டி குறைப்பு அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரி இருக்காது. ​ இதனால் வங்கிகளில் கடன் பெறுவதற்கு முன் அதன் விதிகளைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வங்கிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

ரெப்போ வட்டி விகிதம் என்பது,  இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் கடன் பெறும் போது செலுத்தும் வட்டி விகிதமாகும். இந்த விகிதம் குறையும்போது  வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதங்களையும் குறைக்க முடியும். இதன் காரணமாக, வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற நுகர்வோர் கடன்களின் மாத தவணை (EMI) குறைவடையலாம். வங்கிகள் தங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்து, வாடிக்கையாளர்களுக்கு நன்மை தரும் வகையில் மாற்றங்களை மேற்கொள்கின்றன.

இந்த வட்டி விகிதக் குறைப்புகள், கடன் வாங்குபவர்களுக்கு நன்மையாக அமையும். எனினும், வங்கிகளின் நிகர வட்டி வருமானத்தில் சற்று அழுத்தம் ஏற்படக்கூடும், ஏனெனில் நிதி செலவுகள் அதே அளவில் குறையவில்லை.

இந்த மாற்றங்கள், வங்கிகளின் வட்டி விகிதங்களை வெளிப்புற அடிப்படையில் இணைக்க வேண்டும் என்ற RBI விதிமுறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!...
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!...
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா...
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு...
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?...
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?...
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...