Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அட்சய திருதியை 2025: தங்கம் வாங்க PhonePe மற்றும் Paytm அளிக்கும் சலுகைகள்!

Paytm and PhonePe Akshaya Tritiya Offers : அட்சய திருதியை 2025ல் PhonePe மற்றும் Paytm டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் தங்கத்திற்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் திட்டங்களை அளித்திருக்கின்றன. தங்கம் வாங்கும் பயனர்கள் PhonePe மற்றும் Paytm ஆகியவற்றின் மூலம் தங்கம் வாங்கும்போது சலுகைகளை பயன்படுத்தி அதிக லாபம் பெற முடியும்.

அட்சய திருதியை 2025: தங்கம் வாங்க PhonePe மற்றும் Paytm அளிக்கும் சலுகைகள்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 28 Apr 2025 16:09 PM

அட்சய திருதியை (Akshaya Tritiya) என்பது இந்து மதத்தில் மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. ‘அட்சய’ என்பதற்கு ‘என்றும் குறையாதது’ என்பதைக் குறிக்கும். இதனால், இந்த நாளில் செய்யும் முதலீடுகள் குறிப்பாக தங்கம் வாங்குதல் போன்றவை நிரந்தர செல்வமாக வளரும் என்று நம்பப்படுகிறது. புதிய தொடக்கம், வளம், லாபம் ஆகியவற்றை மனதில் வைத்து மக்கள் தங்கம் வாங்கி வழிபடுகிறார்கள். அன்றைய தினம் தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஏப்ரல் 30, 2025 அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. தி எகனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையின் படி இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளங்களான ஃபோன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் ரிவார்ட்ஸ் திட்டங்களை அறிவித்துள்ளன.

PhonePe அளிக்கும் சலுகை

ஏப்ரல் 30, 2025 அட்சய திருதியை அன்று, PhonePe வழியாக ரூ.2000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள 24K, 99.99% தூய தங்கத்தை ஒரே பரிவர்த்தனையில் வாங்கினால், 1% முதல் அதிகபட்சம் ரூ.2000 வரை தள்ளுபடி பெறலாம். கடைகள் அல்லது இணையதளத்தில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.5 முதலீட்டில் SIP வழியாகவும் தங்கத்தை வாங்கலாம்.

Paytm அளிக்கும் சலுகை:

‘Golden Rush’ திட்டத்தின் கீழ், Paytm வழியாக ரூ.500 அல்லது அதற்கு மேல் தங்கத்தில் முதலீடு செய்தால் 5% மதிப்பில் ரிவார்டு பாயிண்ட்ஸ் வழங்கப்படுகின்றன. இந்த பாயிண்ட்கள் மூலம் ஒரு லீடர்போர்டில் இடம் பிடித்து, 100 கிராம் தங்கம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும். Paytm Gold வாங்கும் நபர்களுக்கு தினசரி SIP (ரூ.9 முதல்) மூலமாக முதலீட்டு விருப்பங்களும் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 

அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்குவதால் எதிர்காலத்தில் மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். இந்நாளில் முதலீடு செய்வது பொருளாதார நிலையை வலுப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. மேலும், குடும்பத்திற்கு பொருளாதாரத்தை அதிகரிக்கும் சக்தி இந்த நாளில் இருப்பதாக பலர் கருதுகின்றனர். அதனால் தான் ஆண்டுதோறும் தங்கம் வாங்கும் மரபு தொடர்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன், அனைத்து ஆஃபர்களையும் நன்கு படித்து புரிந்துகொள்ள வேண்டும். கேஷ்பேக் மற்றும் ரிவார்ட்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை கவனமாக பார்க்க வேண்டும். மேலும், தங்கத்தின விலை, சேமிப்பு விதிமுறைகள் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்யலாம். அட்சய திரிதியை 2025 அன்று தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு, ஃபோன்பே மற்றும் பேடிஎம் வழங்கும் இந்த சிறப்பு சலுகைகள் சிறந்த வாய்ப்பாக அமையக்கூடும். நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்யலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

 

 

ஆந்திராவில் கோர விபத்து..! தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் கோர விபத்து..! தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!...
லட்சுமிதேவி வாசம் செய்யும் அட்சய திருதியை வழிபாடு!
லட்சுமிதேவி வாசம் செய்யும் அட்சய திருதியை வழிபாடு!...
3வது குழந்தையைத் தத்தெடுத்த பராசக்தி நடிகை..!
3வது குழந்தையைத் தத்தெடுத்த பராசக்தி நடிகை..!...
கூகுள் போட்டோஸின் புதிய தொழில்நுட்பம் - ஆபத்தானதா?
கூகுள் போட்டோஸின் புதிய தொழில்நுட்பம் - ஆபத்தானதா?...
4 அணிகள் பிளே ஆஃப் செல்வது உறுதி! CSK, RR வெளியேறிவிட்டதா..?
4 அணிகள் பிளே ஆஃப் செல்வது உறுதி! CSK, RR வெளியேறிவிட்டதா..?...
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எல்லாம் பொய் - சுந்தர் சி ஓபன் டாக்!
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எல்லாம் பொய் - சுந்தர் சி ஓபன் டாக்!...
1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்?
1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்?...
கொரோனாவை கண்டறியும் நானோ தொழில்நுட்பம்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்
கொரோனாவை கண்டறியும் நானோ தொழில்நுட்பம்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்...
பெற்றோர்களின் விவாகரத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது?
பெற்றோர்களின் விவாகரத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது?...
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. இந்த நிற திரி பயன்படுத்தினால் பலன்!
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. இந்த நிற திரி பயன்படுத்தினால் பலன்!...
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து! மீண்டும் சிக்கலில் அமைச்சரவை!
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து! மீண்டும் சிக்கலில் அமைச்சரவை!...