Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆதார் கார்டில் முகவரி மாற்ற வேண்டுமா?.. வீட்டி இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம்!

Aadhaar Card Address Update | ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ள நிலையில் அதில் இருக்கும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், நீங்கள் உங்கள் முகவரியை மாற்றிவிட்டால் அதனை ஆதார் கார்டில் எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டில் முகவரி மாற்ற வேண்டுமா?.. வீட்டி இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 15 Apr 2025 11:56 AM

இந்தியாவைப் பொறுத்தவரை ஆதார் கார்டு (Aadhaar Card) ஒரு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இந்த விதி பொருந்தும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண் உடன் கூடிய இந்த ஆதார் கார்டை வழங்குகிறது. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, கைரேகை மற்றும் கண் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் முக்கியமான விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

சிக்கலை ஏற்படுத்தும் ஆதார் கார்டு பிழைகள்

ஆதார் கார்டில் இத்தகைய முக்கியமான விவரங்க இடம்பெற்றுள்ள நிலையில், அவை சரியாக இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. காரணம், ஆதார் கார்டில் ஏதேனும் விவரங்கள் பிழையாக இருப்பின் அது பல முக்கிய வேலைகளுக்கு தடையாக மாறிவிடும். குறிப்பாக அரசு சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் சமயங்களில் அது சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, ஆதார் கார்டு வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களது விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டில் பிழையாக உள்ள முகவரியை எவ்வாறு சுலபமாக மாற்றுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதாரில் முகவரியை மாற்றுவது எப்படி?

  1. அதற்கு முதலில் ஆதாரின் அதிகாரப்பூர் இணையதளமான https://uidai.gov.in/ செல்ல வெண்டும்.
  2. அங்கு, உங்களது ஆதார் எண் மற்றும் கேப்சாவை பதிவிட வேண்டும்.
  3. இதனை செய்து முடித்த பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
  4. அதனை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
  5. பிறகு அங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் முகவரி மாற்றம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  6. அங்கு உங்களது புதிய முகவரியை பதிவிட்டு அதற்கான உரிய ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி அப்டேட் செய்யும்  பட்சத்தில், சுலபமாக உங்கள் ஆதார் கார்டில் முகவரியை மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முகவரி மாற்றத்திற்கு தேவையாண ஆவணங்கள்

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பணிகளின் காரணமாக இடம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றனர். இந்த சூழலில் அவர்களால் ஒரே முகவரியை வைத்திருப்பது கடினமாகி விடுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் சுலபமாக முகவரியை மாற்றம் செய்துக்கொள்ள UIDAI அனுமதி வழங்குகிறது. அதற்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், சிலிண்டர் பில் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்...