Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் அன்றாட செலவை குறைக்கும் சிறந்த 5 கிரெடிட் கார்டுகள்! உங்கள் சாய்ஸ் எது?

5 Essential Credit Cards: அடிக்கடி ஷாப்பிங் செய்யும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இந்த ஐந்து கிரெடிட் கார்டுகள் தேவையான ரிவார்ட்ஸ், காஷ்பேக் மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் தினமும் பயன்படுத்தும் வகையில், இவை உங்கள் செலவுகளை குறைக்கவும், சேமிப்பை அதிகரிக்கவும் உதவக்கூடியவை.

உங்கள் அன்றாட செலவை குறைக்கும் சிறந்த 5 கிரெடிட் கார்டுகள்! உங்கள் சாய்ஸ் எது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 10 Apr 2025 21:07 PM

இன்றைய பரபரப்பான உலகில் கிரெடிட் கார்டுகள் (Credit Card) என்பது நமது வாழ்க்கையில் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. கிரெடிட் கார்டுகள் என்பது நம்மிடம் பணம் இல்லாத நேரத்தில் வெறும் செலவு செய்வதற்கான கருவி மட்டும் அல்ல. பல சமயங்களில் கிரெடிட் கார்டுகள் நமக்கு செலவுகளை குறைக்கவும், தள்ளுபடிகளை பெறவும் உதவும். இப்பொழுதெல்லாம் சூப்பர் மார்கெட்களில், வணிக வளாககங்களில், தியேட்டர்களில் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் சில சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக சில நிறுவனங்கள் ரிவார்ட்ஸ், காஷ்பேக் (Cashback), ஆஃபர்கள் ஆகியவற்றை அளிக்கின்றன. இதனால் நாம் செலவழிக்கும் தொகை பாதியாக குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு நல்ல கிரெடிட் கார்டு உங்கள் தினசரி வாழ்க்கையை எளிதாக்கி, உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த உதவும். ஆனால் சரியான கிரெடிட் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து உபயோகிப்பது மிகவும் முக்கியம். இந்த பதிவில் சில நமக்கு அன்றாட தேவைகளுக்கு கைகொடுக்கும் 5 கிரெடிட் கார்டுகளை பார்க்கலாம்.

1. எச்டிஎஃப்சி மில்லேனியா கிரெடிட் கார்டு (HDFC Millennia Credit Card)

எச்டிஎஃப்சி மில்லெனியா கிரெடிட் கார்டு என்பது அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் இன்றைய காலகட்ட பயனாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கிரெடிட் கார்டுக்கு ஜொமேட்டோ, ஸ்விக்கி, ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற பிரபலமான தளங்களில் அதிக ரிவார்ட்ஸ் மற்றும் காஷ்பேக் கிடைக்கும். முக்கியமாக, இ-காமர்ஸ் தளங்களில் 5% வரை காஷ்பேக் கிடைக்கும் என்பதால், ஷாப்பிங் செய்யும் போது குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும். மேலும், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் துவங்கும்போது  ரூ. 1,000க்கான ஸ்பெஷல் கூப்பன் கிடைக்கும்.

2. எஸ்பிஐ சிம்ப்ளிகிளிக் கிரெடிட் கார்டு (SBI SimplyCLICK Credit Card)

எஸ்பிஐ சிம்ப்ளிகிளிக் கிரெடிட் கார்டு ஆன்லைனில் அடிக்கடி பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு ஏற்ற சிறந்த தேர்வாக  கருதப்படுகிறது.  அமேசான், புக் மை ஷோ போன்ற தளங்களில் ரிவார்ட்ஸ் பாயிண்ட்கள் கிடைக்கும். இந்த கிரெடிட் கார்டு மூலம் ஆண்டுக்கு  ரூ.1 லட்சம் வரை செலவிட்டால் ரூ.2,000 மதிப்புள்ள இ-வவுச்சர்கள் கிடைக்கும். இந்த வவுச்சர்களைக் குறிப்பிட்ட சில சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

3. ஐசிஐசிஐ அமேசான் பே கிரெடிட் கார்டு (ICICI Amazon Pay Credit Card)

அமேசானில் அதிகமாக பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு 5 சதவிகிதம் ரிவார்ட்ஸும் மற்ற பயனாளர்களுக்கு  3 சதவிகிதம் ரிவார்ட்ஸும் கிடைக்கும்.  இந்த கார்டுக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை  என்பதால் அதிக செலவின்றி பயன்களைப் பெற முடியும்.  இதில் இஎம்ஐ வசதி, அமேசானில் கூடுதல் சலுகைகள் போன்ற பல நன்மைகள் உள்ளன.

4. ஆக்சிஸ் பேங்க் நியோ கிரெடிட் கார்டு (Axis Bank Neo Credit Card)

இந்த கிரெடிட் கார்டு சிறிய பட்ஜெட்டில் சிறந்த சலுகைகளை தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டின் வாயிலாக ஜொமேட்டோ, மிந்த்ரா, புக் மை ஷோ போன்ற தளங்களில் 10  சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், புதிதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள சிறப்பு சலுகைகள் கிடைக்கும். கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த மிகவும் பொருத்தமான கார்டாக இது இருக்கிறது.

5. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் மில்லெனியா கிரெடிட் கார்டு (IDFC FIRST Millennia Credit Card)

இந்த கார்டை பயன்படுத்த தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆன்லைனில் பொருட்கள் வாங்க 6 சதவிகிதமும், ஆஃப்லைனில் பொருட்கள் வாங்க 3 சதவிகிதம் ரிவார்ட்ஸும் கிடைக்கும். இந்த கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தால் 48 நாட்கள் வரை வட்டி செலுத்த தேவையில்லை. அதிகம் செலவுகள் செய்யாதவர்களுக்கு ஏற்ற கிரெடிட் கார்டாக பார்க்கப்படுகிறது.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...