Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெருங்கும் அட்சய திரிதியை… அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு?

Chennai Gold Price : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,200 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே, தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

நெருங்கும் அட்சய திரிதியை… அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு?
தங்கம் விலைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Apr 2025 11:55 AM

சென்னை, ஏப்ரல் 23: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு (Chennai Gold Rate) ரூ. 2,200 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.71,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில்  கிராமுக்கு 275 ரூபாய் குறைந்து, ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  2025 ஏப்ரல் 22ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் ரூ.2200 க்கு தங்கம் விலை உயர்ந்தது.

நெருங்கும் அட்சய திரிதியை

இந்த நிலையில், இந்த விலை தற்போது அப்படியே குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், அட்சய திரிதியை நெருங்கி வரும் நிலையில், இது நகை வாங்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவும்.

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், நடுத்தர வர்கத்தினருக்கு தங்க நகை வாங்குவது எட்டாங்கனியாக மாறி வருகிறது. அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்து.

2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை ரூ.40,000 என்ற நிலையில் இருந்தது. இன்று ரூ.72 ஆயிரத்தை எட்டியுள்ளது. 2025 ஏப்ரல் 1ஆம் தேதி ரூ.68,000 ஆக தங்கம் விலை இருந்தது. ஏப்ரல் 12ஆம் தேதி முதல்முறையாக ரூ.70 ஆயிரத்தை கடந்தது. அதன்பிறகு, 2025 ஏப்ரல் 17ஆம் தேதி 71,000 ரூபாயை கடந்தது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

அதைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் 22ஆம் தேதியான நேற்று சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,200 உயர்ந்தது. இதனால், ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.71,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில்  கிராமுக்கு 275 ரூபாய் குறைந்து, ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.   தங்கம் விலை குறைந்தது நகை பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், 2025 ஏப்ரல் 30ஆம் தேதி அட்சியை திருதியை  வருகிறது. இந்த குறிப்பிட்ட நாளில் மக்கள் தங்க நகைகள் வாங்குவது வழக்கம். நேற்று ஒரே நாளில் ரூ.2,200 எகிறியதால் மக்கள் கலக்கமடைந்தனர். தற்போது, ஏறிய வேகத்திலேயே, தங்கம் விலை குறைந்தது மக்களுக்கு பெரிதும் உதவும். இன்னும் அட்சியை திருதியைக்கு  இன்னும் 6 நாட்களுக்கு உள்ளதால், தங்கம் விலை ஏறுமா இல்ல இறங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

(மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது)

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்... மௌனம் கலைத்த பாகிஸ்தான்!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்... மௌனம் கலைத்த பாகிஸ்தான்!...
முகப்பரு தொல்லையா..? இதை செய்தால் மறையும் அதிசயம்..!
முகப்பரு தொல்லையா..? இதை செய்தால் மறையும் அதிசயம்..!...
ஏஐ மூலம் வீடியோவை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ரம்யா கண்டனம்!
ஏஐ மூலம் வீடியோவை தவறாக பயன்படுத்தியதாக நடிகை ரம்யா கண்டனம்!...
உலகின் உயரமான நடராஜர் சிலை.. தமிழ்நாட்டில் இந்த கோயில் தெரியுமா?
உலகின் உயரமான நடராஜர் சிலை.. தமிழ்நாட்டில் இந்த கோயில் தெரியுமா?...
சித்திரை அமாவாசை எப்போது? - இதெல்லாம் செய்ய மறக்காதீங்க!
சித்திரை அமாவாசை எப்போது? - இதெல்லாம் செய்ய மறக்காதீங்க!...
காதலனின் மிரட்டலால் மனமுடைந்த ஆசிரியை... பின்னர் நடந்த துயரம்...!
காதலனின் மிரட்டலால் மனமுடைந்த ஆசிரியை... பின்னர் நடந்த துயரம்...!...
பளபளப்பான சருமம் பெற பீட்ரூட், கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?
பளபளப்பான சருமம் பெற பீட்ரூட், கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?...
பகலில் வேலை செய்வது போர் - ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்
பகலில் வேலை செய்வது போர் - ஏ.ஆர்.ரகுமானின் ரொட்டின் இதுதான்...
பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்? வெளியான வரைபடம்!
பயங்கரவாதிகள் எப்படி இருப்பார்கள்? வெளியான வரைபடம்!...
கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் - பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!
கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் - பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!...
"மோடியிடம் போய் சொல்" பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி!