1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. 8.25% வரை வட்டி வழங்கும் டாப் 10 வங்கிகள்!
High Yield Fixed Deposit Scheme | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், சில வங்கிகள் தங்களின் 1 முதல் 2 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட திட்டங்களுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

நிதி பாதுகாப்பு (Financial Security) மற்றும் பொருளாதார வளம் (Economic Resources) பெற வேண்டும் என்றால் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதற்கு பல திட்டங்கள் இருந்தாலும் அவை பாதுகாப்பானவையா, அவற்றில் முதலீடு செய்வது சிறந்த லாபத்தை தருமா என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலான மக்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால் எந்த வித சிக்கலும் இல்லாத, நிதி இழப்பை ஏற்படுத்தாத திட்டம் ஒன்று உள்ளது என்றால் அது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) தான். இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். முதலீடு செய்த தொகையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், கூடுதல் பணமும் கிடைக்க வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
எஃப்டி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொருத்தவரை பல கால அளவீடுகளை கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. அதவாது 1 ஆண்டுக்கான திட்டம், 2 ஆண்டுகளுக்கான திட்டம், 3 ஆண்டுகளுக்கான திட்டம் மற்றும் 5 ஆண்டுகளுக்கான திட்டம் என செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களின் கால அளவீட்டை கொண்டு அதற்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நிலையான வைப்பு நிதி திட்டத்தை பொருத்தவரை அதிக கால அளவீட்டை கொண்ட திட்டத்திற்கு ஆதிக வட்டி வழங்கப்படுகிறது. குறைவான கால அளவீட்டை கொண்ட திட்டத்திற்கு குறைந்த வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 1 முதல் 2 ஆண்டுகள் கால அளவீட்டை கொண்ட திட்டத்திற்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
1 – 2 ஆண்டுகளுக்கான எஃப்டி – 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்
வங்கி | கால அளவீடு | வட்டி விகிதம் |
ஆர்பிஎல் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8 சதவீதம் |
பந்தன் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.05 சதவீதம் |
டிசிபி வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.05 சதவீதம் |
ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8 சதவீதம் |
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.15 சதவீதம் |
இஎஸ்ஏஎஃப் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.25 சதவீதம் |
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.25 சதவீதம் |
சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.5 சதவீதம் |
உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.5 சதவீதம் |
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 1 முதல் 2 ஆண்டுகள் | 8.25 சதவீதம் |
மேற்குறிப்பிட்ட இந்த 10 வங்கிகள் 1 முதல் 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளாக உள்ளன.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.